முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற…

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை.சோ. சேனாதிராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனை
அடைந்தேன்.

ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஒலித்த அவரது குரல் மௌனித்தது மிகப்பெரிய இழப்பாகும். இலங்கை இனவாத அரசால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்படுத்தப்பட்டவர்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழரசு கட்சியினருக்கும், ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா மாவை. சோ.சேனாதிராசா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில்…
அடுத்த செய்திதிமுக ஆட்சியில் நிகழும் அத்தனை அட்டூழியங்களுக்கும் மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்! – சீமான் கடும் கண்டனம்