நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் ஆண்டார் கொட்டாரம் ஊராட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி இரா.மகாகவி காளிதாஸ் அவர்களின் தந்தை ஐயா சு.இராமச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி இரா.மகாகவி காளிதாஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சு.இராமச்சந்திரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


