முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்தி திணிப்புக்கு எதிராக அன்னைத்தமிழ் மொழியைக் காக்க மாணவப் பருவத்திலேயே…

0

இந்தி திணிப்புக்கு எதிராக அன்னைத்தமிழ் மொழியைக் காக்க மாணவப் பருவத்திலேயே போராட்டக்களத்தில் முன்னின்று போராடிய போராளி!

சிங்கள இனவாத கொடுங்கரங்களால் ஈழத்தில் நம் தொப்புள்கொடி உறவுகள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை செய்த பெருந்தகை!

தாயகம் காக்க தம்முயிர் ஈந்த மாவீரர்களைக் காலந்தோறும் நினைவுகூரும் வகையில் தஞ்சை மண்ணில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ அமைத்து தந்து வரலாற்றில் தடம் பதித்த பெருந்தமிழர்!

‘புதிய பார்வை’, ‘தமிழரசி’ பத்திரிக்கைகளைத் திறம்பட நடத்தியதோடு, தமிழரசி அறக்கட்டளை நிறுவி ஏழை-எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த மாந்தநேயர்!

பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கும் வகையில் தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ‘தைத்திருவிழா’ நடத்திய புகழுக்குரியவர்!

தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பும், பெரும் அக்கறையும் கொண்டிருந்த
மதிப்பிற்குரிய ஐயா ம.நடராசன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாளில் என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபல்லுயிர்ப் பெருக்க மண்டலமான நீலகிரியில் சில்லகல்லா நீரேற்றுப் புனல்மின் திட்டம் அமைப்பது நிலச்சரிவுக்கே வழிவகுக்கும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர்…