முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருச்செங்கோடு தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைப்…

0

நாம் தமிழர் கட்சி – திருச்செங்கோடு தொகுதியின் குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இளவரசன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, குருதிக்கொடை பாசறையின் மூலம் மக்களின் உயிர்காக்கும் உன்னதப் பணியாற்றிவந்த ஆகச்சிறந்த களப்போராளியை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி இளவரசன் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி இளவரசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபுனித ரமலான் பெருவாழ்த்துகள்! இறைவனை எண்ணி நோன்பு நோற்கும் எனதன்பு…
அடுத்த செய்திபுனித ரமலான் பெருநாள் வாழ்த்துகள்! இறைவனை எண்ணி நோன்பு நோற்கும்…