நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரப் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய ஐயா பிச்சைமுத்து அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த பிச்சைமுத்து அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பிச்சைமுத்து அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



