நாம் தமிழர் கட்சி – முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, கமுதி ஒன்றியத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி இசைஅரசன் அவர்களின் மாமியாரும், அன்புத் தங்கை பேச்சியம்மாள் இசைஅரசன் அவர்களின் தாயார் அம்மா க.லெட்சுமியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை பேச்சியம்மாள், தம்பி இசைஅரசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா க.லெட்சுமியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



