உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று!
கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும்
உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்!
காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும்,
செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் – வானகத்தையும்
விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட!
தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது!
நாம் தமிழர் கட்சியும் குருதிக்கொடைப் பாசறை என்றொரு தனிப்படைப்பிரிவை உருவாக்கி கடந்த 15 ஆண்டுகளில் 3 இலட்சம் அலகுகளுக்கும் மேற்பட்ட குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது. அதனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவே கடந்த 18.05.2025 அன்று கோவையில் நடைபெற்ற தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்தின்போது குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடை வழங்கும் ஒவ்வொரு உறவுக்கும் ரூபாய் ரூ.2 இலட்சம் மதிப்பிலான காப்பீடு திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு – பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன்.
என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்!
தொடரட்டும் உயிர்காக்க
குருதிக் கொடை தரும்
உங்கள் உன்னதப் பெருந்தொண்டு!
மலரட்டும் இப்பூவுலகம்,
பொதுநலம் பேணும்
உங்கள் மாசற்ற
பேரன்புகொண்டு!
World Blood Donor Day!
“The help rendered at the right time is greater than the world itself.”
“Even if we haven’t done a single good thing for someone, if they help us in need, even awarding them the world and the sky wouldn’t be enough."
— Thiruvalluvar
These timeless Kurals from the great Tamil poet Thiruvalluvar remind us that blood donation is not just a timely act of help, but a divine service that saves lives and prevents irreparable loss.
🩸 Every drop of blood you donate is a powerful, life-saving medicine.🩸
Without selfish motives, you step forward to protect the health of others and save lives in emergencies. This noble act deserves our highest respect and heartfelt gratitude.
The Naam Tamilar Katchi (NTK), through its Blood Donation Wing, has donated over 3 lakh units of blood in the last 15 years, saving countless lives across Tamil Nadu.
To encourage this selfless service further, on 18-05-2025, during the Tamil National Uprising Public Meeting held in Coimbatore, we launched a 2 Lakh Life Insurance Scheme for every individual who donates blood through our wing.
To my dear brothers and sisters who rush to donate blood, day or night, without hesitation, I offer my revolutionary greetings and heartfelt appreciation.
Every year, when our volunteers receive Certificates of Appreciation from district collectors for donating the highest number of units, we NTKians feel a deep sense of honor and fulfillment.
On this World Blood Donor Day, I extend my warm wishes to every selfless donor.
May your noble service continue to save lives.
Let the world bloom beautifully.
nurtured by your pure and selfless love for humanity.




