சுவிட்சர்லாந்து நாட்டினுடைய நாம் தமிழர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் பாசத்திற்குரிய அண்ணன் இளங்கோ அவர்களின் அன்புத்துணைவியார் மதிப்பிற்குரிய அண்ணியார் சகிலாதேவி அவர்கள் இலங்கை நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
நாம் தமிழர் கட்சியின் மீதும், தமிழ்த்தேசிய அரசியல் மீதும் பெரும் பற்றும், ஈடுபாடும் கொண்டு துணை நிற்கும் அண்ணன் இளங்கோ அவர்களுக்கு நிகழ்ந்துள்ள ஈடுசெய்யவியலாத இப்பேரிழப்பு மிகுந்த மனவலியைத் தருகிறது. இத்துயர்மிகு வேளையில் அண்ணன் இளங்கோ அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சுவிட்சர்லாந்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
அண்ணியார் சகிலாதேவி இளங்கோ அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



