நாம் தமிழர் கட்சி – சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சபாபதி அவர்களின் சகோதரர் கோவி மணிவண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய சகோதரரை இழந்துவாடும் அன்புத்தம்பி சபாபதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் கோவி மணிவண்ணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



