முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாவட்டம், அவிநாசி,…

0

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி,

பிறர் உயிரைக் காக்க தன்னுயிரையே கொடையாகக் கொடுத்த வீரத்தமிழச்சி தங்கை செங்கொடியின் உருவத்தையே தங்களது இலச்சினையில் இலட்சிய உறுதியுடன் ஏந்தி நிற்கும் நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் சார்பாக,

இன்று 17-07-2025 மாலை 04 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்!

வரதட்சணை கொடுமையால் இனி இதுபோன்று ஒரு உயிர் கூட போகாத வகையில் இம்மண்ணில் மாற்றம் நிகழட்டும்!

"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!"
என்ற பெரும்பாவலன் பாட்டன் பாரதியின் புரட்சி முழக்கத்திற்கேற்ப,

பெண்ணெனும் பெரு நெருப்பு பற்றி எரியட்டும் புரட்சித் தீயாக!

@ntkwomenswing

முந்தைய செய்திபெருந்த்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!
அடுத்த செய்திவரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாவட்டம், அவிநாசி,…