நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ராஜீவ் காந்தி அவர்களின் தந்தையாரும்,
மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கை கலையேந்திரி அவர்களின் மாமனாருமான, ஐயா சேட்டு (எ) வெங்கடேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், தங்கைக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா சேட்டு (எ) வெங்கடேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



