'வாத்தி' திரைப்படத்துக்கு நெஞ்சை உருக்கும் இன்னிசை அமைத்ததற்காக
அன்பு இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்கள் இரண்டாவது முறையாக இந்திய ஒன்றிய அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை வென்றுள்ள செய்தியறிந்து பேருவகை அடைந்தேன்.
காலத்தால் அழியாத காவியப் படைப்புகள் பல தந்து, தம்முடைய கலைப்பயணத்தில் செல்லும் திசையெல்லாம் இசையால் வெல்லும் இசைத் தமிழன்!
அன்பு இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்கள் இன்னும் பல உயரிய விருதுகள் வென்று மக்கள் மனங்களை ஆண்டிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
@gvprakash



