நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் பாலவாய் கார்த்திக் அவர்களின் மாமனாரும், மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கா.லெட்சுமிதேவி அவர்களின் தந்தையுமான ஐயா மேட்டுக்கோட்டகம் கோ.ஜெயராமன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரம் அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



