முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுள் ஒருவரான…

0

நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களுள் ஒருவரான ஐயா க.மணியன் அவர்களின் மகளும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் அன்புச்சகோதரர் ச.கலைச்செல்வம் அவர்களின் துணைவியாருமாகிய தங்கை மனோரஞ்சிதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அன்பு மகளை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா க.மணியன் அவர்களுக்கும், உயிர்த்துணையை இழந்து பேரிழப்புக்கு ஆளாகியிருக்கும் சகோதரர் ச.கலைச்செல்வம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை மனோரஞ்சிதம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி‘கல்வி வள்ளல்’ பாரிவேந்தர் அவர்களுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
அடுத்த செய்திதனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி,…