நாம் தமிழர் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே, என் கரம்பற்றி என்னோடு கொள்கைவழியில் பயணிக்கும் ஆருயிர் இளவல்!
மங்காத இனஉணர்வுவைக் கொண்டு, தமிழ்த்தேசிய அரசியல் அரியணை ஏறுவதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்திடும் எனது பேரன்பிற்கினிய தம்பி!
எழுத்து, பேச்சு, நிர்வாக மேலாண்மை எனும் தனது ஒப்பற்ற தனித்திறன்களையும், பன்முக ஆற்றல்களையும் எல்லாம் இனத்தின் நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் நாளும் செலவழிக்கும் பேராற்றலாளன்!
தன்னை முன்னிறுத்தாது, மண்ணையும், மக்களையும், இலட்சியத்தையும், கனவையும் முன்னிறுத்தி, பொது நோக்கத்துக்காக அர்ப்பணிப்போடு உழைக்கும் உயர் தகுதிகள் கொண்ட எனது நம்பிக்கைக்குரிய முதன்மைத்தளபதி!
தனது அரவணைக்கும் பெருங்குணத்தாலும், இனிமையான அணுகுமுறையாலும், கனிவான சொற்களாலும் எல்லோரது அன்பையும், ஆதரவையும் பெற்றிருக்கும் உயர் பண்பாளன்!
எப்போதும் எனது மனவோட்டமறிந்து, அதற்கேற்ப செயலாற்றும் தன்மைகொண்ட என்னுடைய இதயத்துக்கு நெருக்கமான உடன்பிறந்தான்!
ஆருயிர் தம்பி வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களுக்கு என்னுடைய அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
@manisenthilntk



