நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சி, கேசவன் பட்டியைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை வளைகுடா துணைச் செயலாளர் அன்புத்தம்பி கோபாலகிருஷ்ணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ச.பால்ராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ச.பால்ராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


