முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி குளச்சல் மண்டலத்தைச் சேர்ந்த,…

0

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி குளச்சல் மண்டலத்தைச் சேர்ந்த, தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளரும் கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் 10வது மன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி ரூபன் பொன்னுமணி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பொன்னுமணி வேலாயுதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பொன்னுமணி வேலாயுதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவிடுதலைப் போராட்ட வீரர் சிவசிதம்பர ராமசாமி படையாட்சியாரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் திட்டக்குடி மண்டலம் (திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்