முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் குரூப் ந.வளையனேந்தல் ஐயா…

0

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் குரூப் ந.வளையனேந்தல் ஐயா காரிச்சாமி அவர்களின் நிலத்தை அபகரிப்பு செய்த பரமக்குடி வட்டாட்சியர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபகரிக்கப்பட்ட நிலத்தை தமிழ்நாடு அரசு மீட்டுத்தர வேண்டும்!

@CMOTamilnadu @mkstalin
@KKSSRR_DMK @pmoorthy21

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் கிராமத்தைச்சேர்ந்த ஐயா காரிச்சாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தை, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி போலி பட்டா தயாரித்து, நில அபகரிப்பு செய்து விற்பனை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடைபெறும் நில அபகரிப்பு முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கைப்பார்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஐயா காரிச்சாமி அவர்களுக்கு சொந்தமான நிலத்திற்கான பட்டா ஆவணத்தில் காரிச்சாமி என்பதற்கு பதிலாக கூரிச்சாமி என்று பெயர் தவறுதலாக இருப்பதை தமக்கு சாதகமாக்கிக்கொண்டு, எமனேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலரும், நில அளவர் இ. அசோகனும், பரமக்குடி வட்டாட்சியர் எஸ்.கே.வரதன் கூட்டுச்சதி செய்து, அதே ஊரில் வசிக்கும் முருகன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளது அப்பட்டமான அதிகார மோசடியாகும். இது குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகளும், காவல்துறையும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும், இதுபோன்ற அதிகார அத்துமீறல்களால் நடைபெறும் நில அபகரிப்பினை தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

ஆகவே, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் குரூப் ந.வளையனேந்தல் ஐயா காரிச்சாமி ஐயா காரிச்சாமி அவர்களின் நிலத்தை பட்டா மோசடி செய்து அபகரித்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதுடன், காரிச்சாமி அவர்களின் நிலத்தை மீட்டுத்தருமாறும் வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநேற்று 27-09-2025 கரூரில் தவெக தலைவர் தம்பி விஜய் அவர்களின்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – எழுத்தறிவித்த இறைவன் தாத்தா பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம்!