நாம் தமிழர் கட்சி – செங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி க.இராசேந்திரன் அவர்களின் தாயாரும், மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சைலஜா அவர்களின் மாமியாருமான அம்மா க. சிந்தாமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் க.இராசேந்திரன், சைலஜா,அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா க.சிந்தாமணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



