முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, நொச்சியூர் -பாலவாய் பகுதியைச்…

0

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, நொச்சியூர் -பாலவாய் பகுதியைச் சேர்ந்த களப்போராளி மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கா.பாலசுந்தர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இளம் வயதிலேயே இனஉணர்வு கொண்டு, ‘நாம் தமிழர்’ எனும் இனமானப் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றிய அன்புத்தம்பியின் இழப்பு என்னைக் கலங்கச் செய்கிறது. கட்சியின் வேர்களாகத் திகழும் களப்போராளிகளின் இழப்பென்பது ஈடுஇணையற்றது. மறைந்தாலும் தம்பியின் கனவுகளும், இலட்சியங்களும் நம்மோடுதான் இருக்கும். அதனை ஈடேற்ற உறுதியேற்போம்.

தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்!