முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, ஆன்றோர்…

0

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, ஆன்றோர் அவையப் பொறுப்பாளர் அப்பா முனைவர் ச.மணி அவர்களின் அவர்களின் மூத்த சகோதரரும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி வழக்கறிஞர் மணிசெந்தில் அவர்களின் பெரிய தந்தையுமான, மூத்த எழுத்தாளர், பெருந்தமிழர் ஐயா ச.கலியாணராமன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

யாமறிந்த மொழிகளிலே, இன்பத்துள் இன்பம், சூடினர் இட்டப் பூ உள்ளீட்ட பல நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்த்தவர். அவரது பஞ்சம் பிழைக்க என்ற நாவல் தமிழக அரசின் விருது உள்ளீட்ட பல விருதுகளை குவித்தது. மொழி உணர்வும், எழுத்தாற்றலும் கொண்ட அவரது மறைவு தமிழ் எழுத்துலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு.

ஐயா அவர்களை இழந்து வாடும் அப்பா மணி, தம்பி மணி செந்தில் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும்
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

எழுத்தாளுமை ஐயா ச.கலியாணராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைத்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, ஆன்றோர்…