தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே துரைசாமிபுரத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கொடும் விபத்தில் 8 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @mkstalin


