அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி..!
இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வென்ற முதல் பெண்ணரசி..!
தம்முடைய பேரன்பிற்குரிய கணவர் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைப் படுகொலை செய்த ஆங்கிலேயரை கொன்று பழி தீர்த்த மாதரசி..!
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி, பெண்ணியத்தின் பெரு வடிவமாய் நின்ற தமிழினப் பேராளுமை, போர்க்களம் புகுந்து மறப்போர் புரிந்து இழந்த தாய்மண்ணை மீட்ட விடுதலை வேங்கை நம்முடைய வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!



