நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் மனிதநேய மருத்துவர் போற்றுதற்குரிய ஐயா இலரா.பாரதிச்செல்வன், தமிழ்த்தேசிய எழுத்தாளர் ஐயா இலரா.மோகன் ஆகியோரின் மூத்த சகோதரியும், கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநிலத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா இராம.அரவிந்தன் அவர்களின் தாயாருமான அம்மா சுந்தராம்பாள் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.
அவரை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா இராம.அரவிந்தன், ஐயா மருத்துவர் இலரா.பாரதிச்செல்வன், ஐயா இலரா.மோகன் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் மற்றும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சுந்தராம்பாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


