முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக…

0

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு நிதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

@CMOTamilnadu @mkstalin

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத்தொகுதி சத்திரக்குடியில் 33 குழந்தைகள் உட்பட 45 பேர் பயணித்த தனியார் பள்ளி வாகனம் மீது கருங்கற்கள் ஏற்றி வந்த கனரக வாகனம் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயமடைந்தோடு, அதில் பயணித்த 35 குழந்தைகளும் உடலின் வெவ்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இத்துயர நிகழ்வு தொடர்பாக கனரக வாகன ஓட்டுநர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பிற்கான துயர்துடைப்பு நிதியை வழங்க கனரக வாகன உரிமையாளரோ, அரசோ வழங்க முன்வரவில்லை என்பது கண்டனத்துக்குரியது. இதனால் சத்திரக்குடி விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆகவே, சத்திரக்குடி தனியார் பள்ளி வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய உயர் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி, சேக்காடு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில…