நாம் தமிழர் கட்சி – மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நீடாமங்கலம் நகரச் செயலாளர் அன்புத்தம்பி சி.பிரபு ( எ ) பிரகதீஸ்வரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த தம்பி சி.பிரபு ( எ ) பிரகதீஸ்வரன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சி.பிரபு ( எ ) பிரகதீஸ்வரன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



