முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி பகுதி பொறுப்பாளர் அன்புத்தம்பி குப்புசாமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றிவந்த தம்பி குப்புசாமி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி குப்புசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் புவனகிரி தெற்கு மாவட்டத் தலைவர் நியமனம்