முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்! உலகெங்கிலும் வாழும்…

0

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்!

உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடு!

சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது; நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை; கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல;
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிகைப் பந்தலுக்கு ஒப்பானது! என்பது போன்ற புரட்சிகர சிந்தனைகளை எங்களைப் போன்ற பிள்ளைகளின் நெஞ்சில் விதைத்த அரசியல் பேராசான்..!

அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை..!

கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

முந்தைய செய்திஉலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்! அன்பும் -…
அடுத்த செய்திசட்டமன்றத் தேர்தல் 2026.! 14.04.2026 | திருச்சுழி சட்டமன்ற தொகுதி…