முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி…

0

தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து' என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப
நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக திகழ்ந்து, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவுமிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலியத் தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!

முந்தைய செய்திஅதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மே-18, தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான கலந்தாய்வு