முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான…

0

வளைகுடா நாடான ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான புதிய விடியல் குழுவினைச் சேர்ந்த உறவுகள் வாரந்தோறும், அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு, தாய்த்தமிழ் மொழியை கற்பிக்கும் பணியை தொடர்ந்து பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பொருளாதார தேடலுக்காக புலம் பெயர்ந்து வாழும் நாட்டில், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்கள் எல்லா பள்ளிகளிலும் தமிழை கற்க முடியாத சூழலில், அவர்களுக்கு தாய்மொழியை கற்பிக்க வேண்டும் எனும் உயர்ந்த இலக்கிற்காக பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையிலும், தமிழ் மொழி காக்கும் இவ்வுயரிய பணியைச் செய்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், 'புதிய விடியல்' நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன உணர்வோடும், மொழிப் பற்றோடும் தமிழை வளர்த்து வரும் உங்களின் அரும்பணி தொடர என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துகள்!!!

முந்தைய செய்தி10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, பாம்புவிழுந்தான்…