முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, தகவல்…

0

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி தம்பிதுரை அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி தம்பிதுரை அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி தம்பிதுரை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதன்னிகரற்ற கலைத்திறன் மூலம் தன்னுடைய கண் கண்ட காவியக் காட்சிகளை,…
அடுத்த செய்திஅஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு…