தங்கள் உடலையும், உயிரையும் பொருட்படுத்தாது, இரவு – பகல் பாராது, மக்கள் உயிர்காக்கவும், நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உலகம் முழுவதும் அரும்பாடாற்றும் மருத்துவர் பெருந்தகைகள் அனைவரும் மிகுந்த போற்றுதலுக்குரியவர்கள்; வணங்கத்தக்கவர்கள்!
உலகில் மானுட சமூகம் மட்டுமின்றிப் பிற உயிர்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கும், காயங்களுக்கும் மருத்துவச் சிகிச்சையளித்து உயிர்காக்கும் உன்னதப் பெரும் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை உலகம் போற்றி வருகின்றது.
மனித வடிவில் தெய்வமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவர் பெருமக்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
#DoctorsDay



