முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அமரன் திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இந்திய அரசின் விருது…

0

அமரன் திரைப்படத்தின்
சிறந்த பின்னணி இசைக்காக
இந்திய அரசின் விருது வென்ற
ஆருயிர்  இளவல்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களுக்கு
நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துகள்!

தமிழ்த்திரைத்துறையில் தன்னுடைய மனதை மயக்கும் இன்னிசையால் கோடிக்கணக்கான இதயங்களை கவர்ந்த அன்புத்தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார், மூன்றாவது முறையாக இந்திய அரசின் விருதை வென்று தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தமக்கு பிடித்தமானத் துறையில் தம்முடைய விடாமுயற்சியாலும், அயராத உழைப்பாலும் தனித்திறனை வளர்த்து, அளப்பரிய சாதனை புரிந்து வளரிளம் தமிழ்த்தலைமுறைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் தம்பி ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இசைத்துறையில் வழங்கப்பெறும்
உலக அளவிலான விருதுகளையும் வென்று வரலாறு படைக்க
என்னுடைய அன்புத்தம்பி
ஜி.வி.பிரகாஷ் குமார்
அவர்களுக்கு என்னுடைய
அன்பும், வாழ்த்துகளும்!

@gvprakash

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி, தலைஞாயிறு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…