தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த ஈகி பெருந்தமிழர் தாத்தா சங்கரலிங்கனார் அவர்களினுடைய நினைவு நாளையொட்டி, புரட்டாசி 27 (13-10-2025) காலை 10 மணியளவில் சென்னை கிண்டி, அண்ணல் காந்தி மண்டபத்தில் உள்ள தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.



