உழைப்புச் சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, அடிமை வாழ்வென்னும் அடக்குமுறைக்கெதிராக, அடிப்படை உரிமையான உழைப்புக்கேற்ற உரிய கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மீது அன்றைய திமுக அரசு சிறிதும் மனச்சான்றின்றி, அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு பச்சிளங்குழந்தை உட்பட 17 பேரைப் பச்சைப்படுகொலை செய்த துயரந் தோய்ந்த 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
சமத்துவம், சமூகநீதி, வர்க்க விடுதலை என்றெல்லாம் பாடமெடுத்துவிட்டு அமைதிவழியில் போராடிய மக்களை அன்றைய திமுக அரசு தனது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியும், தாமிரபரணி ஆற்றில் தள்ளி மூழ்கடித்தும் கொன்றது தமிழ்நாடு வரலாற்றில் இரத்தக்கறை படிந்த என்றும் அழியா கரும்புள்ளியாகும்!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்போராளிகளுக்கு என்னுடைய வீரவணக்கம்!
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி