நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி ச.அழகுசுந்தரம் அவர்களின் தாயார் அம்மா ச.முத்துராக்கு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ச.முத்துராக்கு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



