நாம் தமிழர் கட்சி – மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளார் அன்புத்தம்பி கொணலை பல்தசார் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையான சுற்றுச்சூழல் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி கொணலை பல்தசார் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி கொணலை பல்தசார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி கொணலை பல்தசார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
