நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, செல்லம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளார் அன்புத்தம்பி இரா.கனி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையான உழவர் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி இரா.கனி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி இரா.கனி அவர்களுக்கு என்து கண்ணீர் வணக்கம்!
