முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி,…

0

நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி, பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி காதர் மொய்தீன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த காதர் மொய்தீன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி காதர் மொய்தீன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சிவகங்கை சட்டமன்றத் தொகுதி தகவல்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை