முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின்…

0

தமிழ்ப்படைப்புலகின் மகத்தான திரைக்கலைஞன்! பன்முகத்திறன் கொண்ட ஒப்பற்ற படைப்பாளி! மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டு நிற்கும் இனமான இயக்குநர்! என் பேரன்பிற்கினிய இளவல் அன்புத்தம்பி சேரன் அவர்களின் தாயார் பாசத்திற்குரிய அம்மா கமலா பாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் மறைவென்பது ஈடு செய்ய இயலாப் பேரிழப்பு; தாங்கொணாத் துயரம். அந்தத் தாயை இழந்துப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டு நிற்கும் தம்பியின் நிலைகண்டு உடன்பிறந்தவனாய் மனம் கலங்குகிறேன். இக்கொடுந்துயரிலிருந்து மீண்டுவர மூத்தவனாய் தம்பியோடு இத்தருணத்தில் உடன்நிற்கிறேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா கமலா பாண்டியன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

@CheranDirector

முந்தைய செய்திஅறிக்கை – அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, வலசக்காடு…