முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆகச்சிறந்த ஆய்வு நூலுக்காக, அன்பிற்குரிய…

0

‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற ஆகச்சிறந்த ஆய்வு நூலுக்காக, அன்பிற்குரிய அண்ணன் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு, 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. 1920 முதல் 1970 வரையிலான தமிழ்ச் சிறுகதைகளின் அரை நூற்றாண்டு வரலாற்றை ஆவணப்படுத்திய ‘தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்’ நூல், நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியையும் நிமிர்வையும் காட்டும் காலப் பெட்டகமாகும்.

சிறந்த இலக்கியப் படைப்புக்கான உயரிய சாகித்திய அகாடமி விருதினைப் பெறும் அன்பிற்குரிய அண்ணன் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திஉயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும்…
அடுத்த செய்திஎங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு…