நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஆ.ஜஸ்டின் வளனரசு அவர்களின் தந்தை ஐயா அ.ஆல்பர்ட் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அ.ஆல்பர்ட் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


