நாம் தமிழர் கட்சி – முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, அலங்கானூர் கிளையைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மு.ராசசேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, அயராது களப்பணியாற்றி வந்த அன்புத் தம்பி மு.ராசசேகர் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருப்பது ஆற்ற முடியாதப் பேரிழப்பாகும்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி மு.ராசசேகர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



