நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தங்கை பிரியா பிரபாகரன் அவர்களின் தந்தையும் வணிகர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பிரபாகரன் அவர்களின் மாமனாருமான ஐயா மாதேஷ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத் தங்கை பிரியா, அன்புத் தம்பி பிரபாகரன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா மாதேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



