முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஓலைச்சுவடிகளில் ஒடுங்கி இருந்த தமிழுக்கு அச்சுப்பதிப்பெனும் அரியாசனம் தந்த பேராசான்..!…

0

ஓலைச்சுவடிகளில் ஒடுங்கி இருந்த தமிழுக்கு அச்சுப்பதிப்பெனும் அரியாசனம் தந்த பேராசான்..!

அழிவின் விளிம்பிலிருந்த அருந்தமிழ் நூல்களைப் பதிப்பித்துக் காத்த பெருமகன்..!

சங்கத்தமிழ் நூல்களான சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு நூல்கள், பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், திருக்குற்றாலக் குறவஞ்சி உள்ளிட்ட பல சிற்றிலக்கிய நூல்களை அரிதின் முயன்று பதிப்பித்து அடுத்த தலைமுறைக்குக் கையளித்த தமிழ்க்காவலர்..!

செய்யுள் நூல்கள் பல இயற்றி செழுந்தமிழுக்கு வளம் சேர்த்த பேரறிஞர்..!

சங்கத்தமிழ் இலக்கிய மீட்சிக்காகத் தம்முடைய வாழ்வினையே ஒப்புவித்து வாழ்ந்த பெருந்தகை..!

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் பெரும்புகழ் போற்றுவோம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026
அடுத்த செய்திமீண்டும் 22 தமிழக மீனவர்கள் கைது! மீண்டும் மீண்டும் கடிதம்…