முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

முதுபெரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்…

0

முதுபெரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பெரியவர் ஐயா மெய்யப்பச் செட்டியார் மறைவிற்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை கட்டி காத்து பல்லாயிரம் திரைக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த பெருந்தகை.

தமிழ்த் திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பத்தின் புதுமைகள் பல புகுத்தி, புகழின் உச்சம் தொட்ட பல நூற்றுக்கணக்கான திறமைமிகுந்த திரைக்கலைஞர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்!

காலத்தால் அழியாத காவிய படைப்புகள் பல தந்து தமிழ்த்திரைக்கலையை தரம் குன்றாது தற்காத்த பெருந்தமிழர்!

ஐயா ஏவிஎம் சரவணன் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

தமிழ்த்திரையுலகின் உண்மையான கதாநாயகன் கலைமாமணி ஐயா ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

#RIPAVMSaravanan

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம், தொண்டி – நம்புதாளை மீனவ மக்களின் நெடுநாள்…
அடுத்த செய்திமதுரை மாவட்டம் கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை தமிழ்நாடு…