உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!
தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!
இன்சொல்லாலும், புன்சிரிப்பாலும் எல்லோரையும் ஆரத்தழுவி அரவணைத்து, போர்க்களத்திலும் புன்னகைத் தவழ களமாடிய மாசற்ற போராளி!
‘உயிர் உன்னதமானதுதான்! அதனினும் உன்னதமானது எமது உரிமை, சுதந்திரம், கௌரவம்’ எனும் தேசியத் தலைவனின் சத்திய மொழிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த மாவீரர்!
தமிழீழ நாட்டின் தலைமை தூதுவன்! தலைவனின் வார்ப்பு!
அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எமது வீரவணக்கம்!
https://x.com/Seeman4TN/status/1984849023476645985
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
a href=”https://www.naamtamilar.org/wp-content/uploads/2025/11/G4uZTEVbgAACgr–scaled.jpg”>



