நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் கிழக்கு மாவட்டத் தலைவர் ஐயா சோ.கந்தன் அவர்களின் துணைவியார் மதிப்பிற்குரிய அம்மா மாலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
உற்றத் துணையை இழந்து பெருந்துயரில் வாடும் ஐயா கந்தன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா மாலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



