செங்கல்பட்டு மாவட்டம்,
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரங்கிமலையைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை ஆன்றோர் அவைத் துணைத் தலைவருமான அன்புத்தம்பி ஜாவித் கான் அவர்களின் தந்தையார் நியமதுல்லா கான் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பி ஜாவித் கான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நியமதுல்லா கான் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



