விடுதலைப் போராட்ட வீரர் சிவசிதம்பர ராமசாமி படையாட்சியாரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள்!

3

அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிய பெருந்தீரர்!

பாட்டாளி மக்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழர்!

பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சகப் பொறுப்பேற்று நல்லாட்சிக்குத் துணைநின்ற நாயகர்!

பல நூறு ஏக்கர் தம் சொந்த நிலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வாரி வழங்கிய வள்ளல்!

விடுதலைப் போராட்ட வீரர், பெருந்தமிழர், நம்முடைய தாத்தா சிவசிதம்பர ராமசாமி படையாட்சியார் அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்தநாளில் ஐயா ஆற்றிய மகத்தான மக்கள் பணிகளை நினைவுகூர்ந்து ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்தி‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’: சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் திட்டக்குடி மண்டலம் (திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்